india

ஜெ., மரணம்.....தொடங்குகிறது நீதி விசாரணை : சிக்கப்போவது யார்?!



ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், மறைவில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் பரவலாக பொதுமக்கள் மத்தியில் கருத்து உலாவரத் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து துணைமுதலமைச்சர் ஓ.பி.எஸ் உட்பட பலதரப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தோரும் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் விசாரணை குழு அடுத்த வாரம் அதாவது வரும் 25 ஆம் தேதி புதன்கிழமை முதல் விசாரணையை தொடங்கவுள்ளது.

நேர்மையாக இந்த விசாரணை ஆணையத்தினை விசாரிக்க அனுமதிக்கும் பட்சத்தில் பல வித தகவல்கள் வெளிவருமெனத் தெரிகிறது.

தனது தாயிற்கு நிகரானவர் என்று ஜெயலலிதாவே கூறிய சசிகலா முதல்  அரசு அமைப்பை நிர்வகித்தவர்கள், தொடர்ச்சியாக அவர் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுவந்த தனியார் மருத்துவமனை, ஆளுநர் இன்னும் பலர் இந்த விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென்பதுவேதான் எளிய மக்களின் ஒற்றை எதிர்பார்ப்பாக உள்ளது.

விசாரணையை தொடர்ந்து ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களுக்கு ஒரு முடிவுகிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






  • Advertisement