india

அவங்க மனசு வைத்தால் தான் டெங்குவை கட்டுப்படுத்த முடியுமாம் : ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல்..!



தமிழகத்தில் இந்தியன் பொது சுகாதார நிறுவனத்தின் தமிழ்நாடு கிளை சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அரசு கட்டிட வளாகங்களில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கவர்கள், கப்புகளிலிருந்து டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரானைட் குவாரிகள், பாறை குழிகள் போன்ற பொது மக்கள் அதிகம் போக முடியாத இடங்களில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாக வாய்ப்புள்ளது. அதோடு அரசு கட்டிடங்களில் 40 சதவீதம் டெங்கு கொசு புழுக்கள் உருவாகின்றன.

வீடுகளில் பெருமளவில் கொசு உற்பத்தி குறைந்துவிட்டன. ஆனால் பொது இடங்களில் தான் தற்போது கொசு உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது.

ரெயில் நிலையங்கள் மற்றும் யார்டு பகுதியில் தான் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாவது ஆய்வில் தெரிய வந்ததால் இந்த இடங்களை கூடுதலாக பணியாளர்களை நியமித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரெயில் நிலையங்களில் இதுவரையிலும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டிடங்களில் பயனற்று கிடக்கும் வாகனங்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்றினால் மட்டுமே 15 நாட்களுக்குள் டெங்கு உற்பத்தி செய்யும் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும். இவற்றை ரெயில்வே துறை செய்யாமல் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது.



  • Advertisement