srilanka

புகையிரத பணி புறக்கணிப்பு தற்காலிக இடைநிறுத்தம்.



இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

பிரதமருடன் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க, மேற்கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து வழங்கப்பட்டுள்ள உறுதிமொழியை அடுத்து பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, புகையிரத சாரதிகள், காவலர்கள், கட்டுப்பாட்டாளர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் இணைந்து இந்த பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடபடவிருந்தமை குறிப்பிடத்தக்கது.




  • Advertisement