world

சிங்கப்பூர் பேருந்துகளில் தமிழில் ' தீபாவளி வாழ்த்து.!!



தீபாவளி பண்டிகையையொட்டி தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சிங்கப்பூர் பேருந்துகளில் தமிழில் வாழ்த்துக்கள் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூர் நாட்டில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். சிங்கப்பூரில் தமிழ் மொழி ஆட்சி மொழியாகவும் உள்ளது.

மேலும் தமிழ் பண்டிகைகளான தீபாவளி, பொங்கல் உள்ளிட்டவைகள் அரசு விழாவாக சிங்கப்பூரில் கொண்டாடப்படும். இந்நிலையில் வழக்கம் போல் இந்தாண்டும் தீபாவளி பண்டிகை சிங்கப்பூரில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு சிங்கப்பூர் பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் அலங்காரத்துடன் தமிழ் மொழியில் தீபாவளி வாழ்த்துக்கள் என எழுதப்பட்டிருந்தது. இதேபோல் மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் தீபாவளி வாழ்த்துகள் என எழுதப்பட்டிருந்தன.

இந்த அலங்காரத்தைக் காணவே தமிழர்கள் ஏரளாமானோர் தீபாவளியன்று மெட்ரோ ரயிலில் படையெடுத்தனர். சிங்கப்பூர் லேண்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது.

மேலும் இந்த மாதம் முழுவதும் பேருந்துகளும் ரயில்களும் இதேபோன்று அலங்காரத்துடன் இயக்கப்படும் என சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபோல் தமிழர்கள் அதிகம் வசிக்கும் லிட்டில் இந்தியா பகுதியில் தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது. சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் உற்சாகமான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.



  • Advertisement