cinema

மீண்டும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் மீனா!



தமிழ் சினிமாவில் கண்ணழகி என்று அழைக்கப்படும் நடிகை மீனா அடுத்ததாக சூப்பர் ஸ்ராருடன் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்ராராக இருக்கும் மோகன்லாலின் புதிய படமொன்றிலேயெ மீனா நடிக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

அஜய் வர்மா என்ற புதிய இயக்குநரின் படத்தில் நடிகை மீனாவுடன் திரிஷாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீனா ஏற்கனவே மோகன்லாலுடன் பல படங்களில் நடித்திருக்கிறார்.

இந்நிலையிலேயே மீண்டும் மோகன்லாலுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.




  • Advertisement