srilanka

பலத்த பாதுகாப்பிற்குள் வவுனியா!



வவுனியாவிற்கு இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் விஜயம் செய்யவுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொலன்னறுவை மற்றும் காலி ஆகிய பகுதிகளில் நடமாடும் சேவை முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டிற்கான இறுதி நடமாடும் சேவை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று நடைபெறவுள்ளது.

இதில் 5000 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதுடன், திவிநெகும திட்டத்தின் கீழ் 1000 பேருக்கு சுயதொழில் உதவிகளும், இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்புக்களும் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் காணிப்பிரச்சினை, ஆள் அடையாள அட்டை, பிறப்பு - இறப்பு பதிவுகள், கடவுச்சீட்டு, விவாகப் பதிவுகள் எனப் பல்வேறு சேவைகளும் இடம்பெறவுள்ளன.

இதில் பங்கெடுப்பதற்காகவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சில அமைச்சர்கள் இன்று வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




  • Advertisement