india

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல்?



பேரறிவாளனின், தந்தையின் உடல்நிலை கருதி மேலும் ஒரு மாத காலம் அவருக்கான பரோலை நீட்டிக்க வேண்டுமென, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலைவழக்கில் கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பேரறிவாளனை, அவரது தந்தையின் உடல்நிலை கருதி, கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி ஒரு மாத பரோலில் தமிழக அரசு விடுவித்தது.

இதனைத் தொடர்ந்து, விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், பேரறிவாளன் தந்தையின் உடல்நிலையை கருதி, மேலும் ஒரு மாத காலத்திற்கு, அவரது பரோலை நீட்டித்து உதவிடுமாறு, வேண்டுகோள் விடுத்துள்ளார்.




  • Advertisement