srilanka

அர்ஜூன் அலேசியஸை பாதுகாக்க முயற்சிக்கவில்லை!



சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியசை பாதுகாக்க தாம் முயற்சிக்கவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் அலோசியஸை எனக்கு மிக நீண்ட காலமாக தெரியும், எனினும் அவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாக்க முயற்சிக்கவில்லை.

கோப் குழுவில் நான் அங்கம் வகிக்கும் காலத்திற்கு முன்னர் இருந்தே அலோசியசுடன் பேசியுள்ளேன். மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய காலத்திலும் முதலீடுகள் தொடர்பில் அலோசியஸ் பேசியுள்ளார்.

அண்மைய நாட்களில் பிணைமுறி மோசடி தொடர்பில் தாம் குற்றமற்றவர் எனவும் தமக்கு உதவுமாறும் அலோசியஸ் கோரியிருந்தார் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.




  • Advertisement