world

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் இரத்ததான முகாம்



மாவீரர் தினத்தை முன்னிட்டு இரத்த தான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(22) காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றுள்ளது.

Edgware community health centre இல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நல அமைச்சு, விளையாட்டு, சமூகநல அமைச்சுக்கள் போன்றோரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தேசவிடுதலைக்காக விதையான மாவீரர்களை நினைவு கூர்ந்து மிகவும் உணர்வுபூரவமாக இரத்த தான முகாமில் பலர் கலந்து கொண்டனர்.

முள்ளளிவாய்கால் தினம், தியாக திலீபன் நினைவு தினம், மாவீரர் நினைவு வாரத்தில் நடைபெறுகின்ற குருதிகொடை நிகழ்வானது பிரித்தானியா வாழ் தமிழர்களின் ஈழப்பற்றையும், தியாக உணர்வையும் எடுத்து இயம்புவதோடு விடுதலையின் தார்பரியத்தினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் பரப்புரையாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




  • Advertisement