srilanka

பிரித்தானியாவிலுள்ள சொகுசு ரயில் சேவை இலங்கையில் அறிமுகம்



கொழும்பில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்களுக்கு நிரந்தர தீர்வாக சொகுசு ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவினால் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் செயற்படுத்தப்படும் பிரதான ரயில் சேவை இதுவென பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவின் தலையீட்டில் மேற்கொள்ளப்படும் சூழலுக்கு நெருக்கமான இந்த போக்குவரத்து சேவை நாட்டிற்கு புதிய அனுபவமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2035 ஆம் ஆண்டு வரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முன்நடவடிக்கையாக கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இலகு ரயில் கட்டமைப்பு ஒன்று அவசியமாகும்.

அதற்காக 7 இடைவழிகளை அடையாளம் காண முடிந்துள்ளது. கடுவெல, மாலபே, பத்தரமுல்ல, பொரளை ஊடாக புறக்கோட்டை வரையிலும், அங்கிருந்து கொள்ளுப்பிட்டிய வரையிலும் இடைவழிகள் இரண்டிற்கு ஜப்பான் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்ட நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடுவலயில் இருந்து மாலபே, பத்தரமுல்ல ஊடாக கோட்டை வரை இலகு ரயில் கட்டமைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.கொழும்பில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்களுக்கு நிரந்தர தீர்வாக சொகுசு ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவினால் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் செயற்படுத்தப்படும் பிரதான ரயில் சேவை இதுவென பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் மற்றும் தனியார் பிரிவின் தலையீட்டில் மேற்கொள்ளப்படும் சூழலுக்கு நெருக்கமான இந்த போக்குவரத்து சேவை நாட்டிற்கு புதிய அனுபவமாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2035 ஆம் ஆண்டு வரையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் முன்நடவடிக்கையாக கொழும்பு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இலகு ரயில் கட்டமைப்பு ஒன்று அவசியமாகும்.

அதற்காக 7 இடைவழிகளை அடையாளம் காண முடிந்துள்ளது. கடுவெல, மாலபே, பத்தரமுல்ல, பொரளை ஊடாக புறக்கோட்டை வரையிலும், அங்கிருந்து கொள்ளுப்பிட்டிய வரையிலும் இடைவழிகள் இரண்டிற்கு ஜப்பான் அரசாங்கத்துடன் இணக்கப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதன் முதற்கட்ட நடவடிக்கை நிறைவு செய்யப்பட்டுள்ளது. கடுவலயில் இருந்து மாலபே, பத்தரமுல்ல ஊடாக கோட்டை வரை இலகு ரயில் கட்டமைப்பு தொடர்பான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




  • Advertisement