article

வியாழன் கிரகத்தில் புயல்!



வியாழன் கிரகத்தை ஆய்வு செய்யும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு சொந்தமான ஜூனோ விண்கலம், வியாழனில் ஏற்பட்ட புயலினை படமெடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

குறித்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த கமரா வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்ப வெப்ப நிலைப்பாடுகளை புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.

சமீபத்தில் ஜூனோ விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் கடும் புயல் வீசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது இக்கிரகத்தின் வடபுலத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் கடந்த மாதம் 24 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது. அப்போது விண்கலம் வியாழன் கிரகத்தின் மேகக் கூட்டங்களின் மீது 10,108 கி.மீட்டர் தூரத்தில் பறந்தது.

புகைப்படத்தில் வியாழன் கிரகத்தில் புயல் வீசும் போது மேகக் கூட்டங்கள் களைந்து இருப்பது போல் காணப்படுகின்றது, கரு மேகங்கள் திரண்டுள்ளன.




  • Advertisement